கடலூரில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
கடலூரில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
கடலூர்
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு 9.30 மணி அளவில் கடலூரில் சூறைக்காற்றுடன் திடீரென மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை விடாமல் சுமார் ஒரு மணி நேரம் கொட்டித் தீர்த்தது. அதன் பிறகு நள்ளிரவு 12.30 மணி வரை தூறிக்கொண்டே இருந்தது. இந்த மழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது. மேலும் கடலூர் பாரதி சாலை, நேதாஜி சாலைகளில் தண்ணீர் அதிகளவில் தேங்கி நின்றதால், அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமமடைந்தனர். இதேபோல் நெல்லிக்குப்பம், பண்ருட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
Related Tags :
Next Story