சூறைக்காற்றுடன் பலத்த மழை


சூறைக்காற்றுடன் பலத்த மழை
x

குடியாத்தத்தை அடுத்த மோர்தானா பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன.

வேலூர்

சூறைக்காற்றுடன் மழை

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் தொடர்ந்து மூன்றாவது நாளாக மழை பெய்து பெய்தது சில இடங்களில் சுமாரான மழையும் சில பகுதிகளில் பலத்த மழையும் பெய்தது.

தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

குடியாத்தம் அடுத்த மோர்தானா ஊராட்சியைச் சேர்ந்த மோர்தானா, ஜங்காலப்பல்லி, ராகிமானபல்லி, போடியப்பனூர் ஆகிய கிராமங்களில் நேற்று மதியம் மழை பெய்தது. அப்போது போடியப்பனூர், ராகிமானபல்லி ஆகிய கிராமப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சூறைக்காற்று வீசியதால் ஏராளமான வாழை மரங்கள் சாய்ந்தன, ஏராளமான மரங்களும் சாய்ந்தன. வீடுகள் சேதம் அடைந்து ஓடுகள், மாட்டு கொட்டைகள், குடிசைகள் காற்றில் பறந்தன.

சேதம் ஏற்பட்ட பகுதிகளில் மோர்தானா ஊராட்சி மன்ற தலைவர் பரந்தாமன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த மழை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இருளில் மூழ்கிய கிராமங்கள்

பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்ததால் மோர்தானா ஊராட்சிக்கு உட்பட்ட மோர்தானா, ஜங்காலப்பல்லி, ராகிமானபல்லி, போடியப்பனூர் ஆகிய கிராமங்களில் பல மின்கம்பங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மின்கம்பங்கள் மீது மரங்கள் சாய்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால் 4 கிராமங்களும் இருளில் மூழ்கியது.

உடனடியாக வருவாய்த் துறை, மின்சாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு மின்சாரம் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், வீடுகளை இழந்தவர்களுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story