வால்பாறையில் பலத்த காற்றுடன் கனமழை


வால்பாறையில் பலத்த காற்றுடன் கனமழை
x

வால்பாறையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

காற்றுடன் மழை

வால்பாறை பகுதியில் அவ்வப்போது பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

இதனால் நடுமலை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது. சோலையாறு அணைக்கு வினாடிக்கு வினாடி தண்ணீர் வரத்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது..

இதனால் 7 -வது நாளாக சோலையாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரி நீர் கேரளாவிற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த பலத்த காற்று பெய்த கன மழை காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு 11 மணியளவில் வால்பாறை- பொள்ளாச்சி மலைப்பாதையில் 15-வது கொண்டை ஊசி வளைவு அருகே திடீரென்று மரம் முறிந்து விழுந்தது.

இதனால் அந்த ரோட்டில் 2 மணி நேரத்துக்கும் அதிகமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது.

இது குறித்த தகவலின் பேரில் நெடுஞ்சாலைத்துறையினர் நள்ளிரவு நேரத்திலும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையில் கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதன்பிறகு போக்குவரத்து சரியானது.

சோலையார் அணை

சோலையாறு அணைக்கு வினாடிக்கு 5 ஆயிரத்து 811 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து மின் நிலையம் -1 இயக்கப்பட்டும் சேடல்பாதை வழியாகவும், பரம்பிக் குளம் அணைக்கு 2 ஆயிரத்து 905 கன அடி தண்ணீர் வெளியேற் றப்பட்டு வருகிறது.

இது போல் சோலையாறு மின் நிலையம் -2 இயக்கப்பட்டும் மதகுகள் வழியாகவும் 3ஆயிரம் கனஅடி தண்ணீர் கேரளாவிற்கும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதிகாரிகள் தயார்

மேல்நீரார் அணையில் இருந்து 1,458 கன அடி தண்ணீரும், கீழ் நீரார் அணையிலிருந்து 430 கன அடித் தண்ணீரும் சோலையாறு அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.

வால்பாறையில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. எனவே மழை வெள்ள சேதங்கள் ஏற்படுவதை தவிர்க்க முன்எச்சரிக்கையாக அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர்.

1 More update

Next Story