இடி, மின்னலுடன் பலத்த மழை
இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அக்னி நட்சத்திர கத்திரி வெயிலை மிஞ்சும் வகையில் வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யும் என்பது போன் சூழல் நிலவியது. ஆனால் மழை பெய்யவில்லை.
இந்நிலையில் நேற்று அதிகாலை 2.45 மணியளவில் பெரம்பலூர் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் திடீரென்று இடி, மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. சிறிதுநேரம் பலத்த மழை பெய்தது. பின்னர் நேற்று மாலை 3.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கி சிறிது நேரம் மழை பெய்தது.
இதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம், வேப்பூர், அகரம்சீகூர், காடூர், லெப்பைக்குடிகாடு, எஸ்.ஆடுதுறை, அத்தியூர் மற்றும் வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரம், வெங்கலம், எறையூர் மற்றும் சுற்றுப்புற கிராமப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. ஆலத்தூர் தாலுகா பாடாலூர், செட்டிகுளம் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரை பதிவான மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
பெரம்பலூர்-65, செட்டிகுளம்-10, பாடாலூர்-7, அகரம்சீகூர்-36, லெப்பைக்குடிகாடு-26, புதுவேட்டக்குடி-38, எறையூர்-16, கிருஷ்ணாபுரம்-15, தழுதாழை-17, வி.களத்தூர்-10, வேப்பந்தட்டை-13. மொத்த மழை அளவு-253. சராசரியாக 23 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.