திருவாரூர் மாவட்டத்தில் இடியுடன் கன மழை


திருவாரூர் மாவட்டத்தில் இடியுடன் கன மழை
x

திருவாரூர் மாவட்டத்தில் இடியுடன் கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

திருவாரூர்


திருவாரூர் மாவட்டத்தில் இடியுடன் கன மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இடியுடன் கன மழை

தமிழக பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. மேலும் இந்த மழை இரண்டு நாட்களுக்கு நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில் திருவாரூர் பகுதியில் நேற்று மாலை 5.30 மணிக்கு மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து பலத்த காற்று மற்றும் இடியுடன் கன மழை பெய்தது.

2 மணி நேரம் வெளுத்து வாங்கியது

இந்த மழை 2 மணி நேரம் வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

இந்த கனமழையினால் அவ்வப்போது மின் தடை ஏற்பட்டது. இந்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

திருமக்கோட்டை-கூத்தாநல்லூர்

இதேபோல திருமக்கோட்டை மற்றும் மன்னார்குடி, அதன் சுற்றுவட்டார பகுதிகளான உள்ளிக்கோட்டை, பரவாக்கோட்டை, சவளக்காரன், காரிக்கோட்டை, மேலவாசல் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது.

கூத்தாநல்லூர், வடபாதிமங்கலம், நாகங்குடி, பழையனூர், லெட்சுமாங்குடி, பண்டுதக்குடி, கோரையாறு, பூதமங்கலம், பொதக்குடி, வேளுக்குடி, சித்தனங்குடி, ராமநாதபுரம், ஓகைப்பேரையூர், பாலக்குறிச்சி, திருராமேஸ்வரம், ஓவர்ச்சேரி, தண்ணீர்குன்னம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது

பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். குறுவை சாகுபடி பணிக்கு இந்த மழை பயன் உள்ளதாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

மின்தடை

வடுவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும், நீடாமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்த மழையால் மின்தடை ஏற்பட்டது.


Next Story