வால்பாறையில் பலத்த மழை-நீரோடையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு


வால்பாறையில் பலத்த மழை-நீரோடையில் தண்ணீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 17 March 2023 12:30 AM IST (Updated: 17 March 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

வால்பாறையில் பலத்த மழை பெய்ததால் நீரோடையில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

கோயம்புத்தூர்

வால்பாறை

வால்பாறையில் பலத்த மழை பெய்ததால் நீரோடையில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளார்கள்.

கொட்டித்தீர்த்த கோடை மழை

வால்பாறையில் கடந்த சில தினங்களாக கோடை வெயில் கொளுத்தி வந்தது. இந்தநிலையில் கடந்த 2 தினங்களாக வால்பாறையில் வானம் மப்பும் மந்தாரமுமாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் காைல முதல் மாலை வரை அவ்வப்போது சாரல் மழை பெய்தது. இதனால் அங்கு இதமான காலநிலை நிலவி வருகிறது. இதன்காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை 3 மணி வரை வெயில் அடித்தது. சிறிது நேரத்தில் வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் கோடை மழை பெய்யத்தொடங்கியது. பலத்த இடியுடன் பெய்த மழை சுமார் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்தது.

தேயிலை இலைகள் துளிர்விட்டன

வருகின்ற நாட்களிலும் கோடை மழை பெய்வதற்கான கால சூழ்நிலை இருந்து வருகிறது. கடந்த ஆண்டைப் போல் இல்லாமல் இந்த ஆண்டு முன்கூட்டியே கோடை மழை பெய்து வருவதால் ஜூன் மாதத்தில் கிடைக்க வேண்டிய தென்மேற்கு பருவமழையும் அதிகளவில் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

இந்த கோடை மழையால் தேயிலை செடிகளில் தேயிலை கொழுந்து இலைகள் துளிர் விட்டு வளர்வதற்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதால் தேயிலை தோட்ட நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தண்ணீர் வரத்து

கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக ஒரு மாதமாக வறண்டு கிடந்த வனப் பகுதியை ஒட்டிய நீரோடைகளுக்கு தண்ணீர் வரத்துஅதிகரித்து உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேல்நீராரில் 22 மி.மீ மழையும், வால்பாறையில் 21 மிமீ மழையும், சோலையாறு, கீழ் நீராரில் தலா 1 மி.மீ மழையும் பெய்துள்ளது.


Next Story