மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.
தென்காசி,
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. அருவியில் தண்ணீர் வரத்து சீராக இருக்கும்போது, சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நேற்று இரவு முதல் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர். இன்று விடுமுறை தினம் என்பதால், குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் ஏமாற்றமடைந்தனர்.
Related Tags :
Next Story