உடுமலையில் கடும் பனிப்பொழிவு


உடுமலையில் கடும் பனிப்பொழிவு
x

உடுமலையில் கடும் பனிப்பொழிவு

திருப்பூர்

தளி

இயற்கையின் படைப்பில் முன்பனிகாலம், பின்பனிகாலம், இளவேனிற்காலம், கோடைகாலம், கார்காலம், இலையுதிர்காலம் உள்ளிட்ட பல்வேறு பருவங்கள் சுழற்சி முறையில் வந்து செல்கின்றன. ஒவ்வொரு பருவமும் ஒவ்வொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சில நாட்களாக உடுமலையின் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்து வந்தது.இதனால் பூமி ஈரப்பதத்திற்கு மாறியது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் இதமான சீதோசண நிலை நிலவி வந்தது.

இந்த சூழலில் நேற்று காலை உடுமலை பகுதியில் கடும் மூடுபனி ஏற்பட்டது.இதனால் சுமார் 15 அடி தூரத்தில் இருந்த வாகனங்களையும் பொதுமக்களையும் அடையாளம் காண முடியாத சூழல் நிலவியது. அத்துடன் குளிரும் வீசியது.

இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதுடன் சாலையில் செல்கின்ற இருசக்கர வாகன ஓட்டிகளும் அவதிக்கு உள்ளானார்கள்.

மூடு பணியை இளைஞர்கள் வீடியோ, புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதுடன் உறவினர்கள் நண்பகளுக்கு பகிர்ந்து மகிழ்ந்தனர்.


Next Story