நாகூர் பகுதியில், கடும் பனிப்பொழிவு


நாகூர் பகுதியில், கடும் பனிப்பொழிவு
x

நாகூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா்.

நாகப்பட்டினம்

நாகூர்

நாகூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனா்.

கடும் பனிப்பொழிவு

நாகை மாவட்டம் நாகப்பட்டினம், நாகூர், திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக இரவில் கடுங்குளிர் மக்களை வாட்டி வதைக்கிறது. இதனால் அதிகாலை நேரத்தில் நாகூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் புகைமூட்டம் போல பனிப்பொழி காணப்பட்டது. இந்த பனிப்பொழிவு காரணமாக காலை நேரத்தில் நடைப்பயிற்சி சென்றவர்கள் மப்ளர், குல்லா அணிந்து சென்றனர்.

விவசாயிகள் சிரமம்

வாகனங்கள் சாலையில் மெதுவாக இயக்கப்பட்டன. பனி மூட்டத்தால் எதிாில் வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர்.

காலை நேரத்தில் வயல்களுக்கு செல்லும் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டனர். தொடர்ந்து 1 மாதமாக நிலவும் கடும் பனிப்பொழிவால் காலை நேரத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்்கை பாதிக்கப்பட்டு உள்ளது.


Next Story