கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டர் பயிற்சி
இந்திய கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டரில் ரோந்து செல்வது உள்ளிட்ட பயிற்சி பாம்பன் கடல் பகுதியில் நடைபெற்று வருகிறது.
ராமேசுவரம்,
கடற்படை விமான தளம்
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே ஐ.என்.எஸ் பருந்து கடற்படை விமான தளம் செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தில் பாதுகாப்பு மற்றும் ரோந்து பணிக்காக 4 ஹெலிகாப்டர்களும் மற்றும் ஆளில்லாத டார்னியர் விமானமும் உள்ளது.
இந்த விமானம் மற்றும் ஹெலிகாப்டர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தின் பாக்சல சந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் தினமும் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.
ெஹலிகாப்டர் பயிற்சி
இந்த நிலையில் சென்னையிலிருந்து பாதுகாப்பு பயிற்சிக்காக உச்சிப்புளி ஐ.என்.எஸ். பருந்து கடற்படை விமான தளத்திற்கு வந்துள்ள இந்திய கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டரில் கடல் மற்றும் கடலோர பகுதிகளில் ரோந்து செல்வது குறித்தும், கடலுக்குள் சந்தேகப்படும்படியாஇந்திய கடற்படை வீரர்களுக்கு ஹெலிகாப்டரில் ரோந்து செல்வது உள்ளிட்ட பயிற்சி பாம்பன் கடல் பகுதியில் நடைபெற்று வருகிறது.ன படகுகள் சென்றால் தாழ்வாக பறந்த படி அந்த படகை விரட்டி பிடிப்பது, கடலில் தத்தளிக்கும் மீனவர்களை பாதுகாப்பாக கயிறு மூலம் மீட்பது உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு பயிற்சிகள் பாம்பன் கடல் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சியில் இந்திய கடற்படையின் 3 ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன. ஆண்டுதோறும் இதே கடல் பகுதியில் ஹெலிகாப்டர் மூலம் கடற்படை வீரர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.