தர்மபுரியில் ஊர்காவல் படையினருக்கு ஹெல்மெட் போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்


தர்மபுரியில்  ஊர்காவல் படையினருக்கு ஹெல்மெட்  போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
x

தர்மபுரியில் ஊர்காவல் படையினருக்கு ஹெல்மெட்டை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

தர்மபுரி

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ஊர்காவல் படையினருக்கு ஹெல்மெட் வழங்கும் நிகழ்ச்சி தர்மபுரி வெண்ணாம்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை தாங்கினார். ஊர்காவல் படை ஏரியா கமாண்டர் ஜெ.ஏ.தண்டபாணி வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் ஊர்காவல் படையை சேர்ந்த 60 பேருக்கு ஹெல்மெட்டுகளை போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

தொடர்ந்து அங்கு இருந்த ஊர்காவல் படை வீரர்களை தனித்தனியாக அழைத்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story