திருமணத்தை பதிவு செய்ய உதவக்கோரி காதல் தம்பதி கலெக்டரிடம் மனு


திருமணத்தை பதிவு செய்ய உதவக்கோரி  காதல் தம்பதி கலெக்டரிடம் மனு
x

திருமணத்தை பதிவு செய்ய உதவக்கோரி காதல் தம்பதி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்

தேனி

தேனி அருகே உள்ள பூதிப்புரம் பேரூராட்சி ஆதிப்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 26). இவரும் கோடாங்கிபட்டியை சேர்ந்த பியூலா ஏஞ்சல் (22) என்பவரும் காதலித்து கடந்த மாதம் திருமணம் செய்தனர். அவர்கள் இருவரும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். கலெக்டர் முரளிதரனிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதில், "வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்த நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். இந்த கலப்பு திருமணத்தை பதிவு செய்வதற்கு முயன்ற போது, முதல் திருமண சான்றுக்காக கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தோம். ஆனால், முதல் திருமண சான்று கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் தயக்கம் காட்டுகிறார். இதனால், எங்கள் திருமணத்தை பதிவு செய்ய முடியவில்லை. எங்கள் திருமணத்தை பதிவு செய்ய உதவ வேண்டும்" என்று கூறியிருந்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் இதுகுறித்து போடி தாசில்தார் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.


Next Story