வேலூரை விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற உறுதுணையாக இருக்க வேண்டும்-கலெக்டர்


வேலூரை விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற உறுதுணையாக இருக்க வேண்டும்-கலெக்டர்
x

வேலூரை விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசினார்.

வேலூர்

வேலூரை விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசினார்.

விழிப்புணர்வு நிகழ்ச்சி

வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஸ்ரீராம்பாபு முன்னிலை வகித்தார். மேலும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கையேட்டினை வெளியிடப்பட்டு, உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் பேசியதாவது:-

தற்போது நோயினால் ஏற்படும் மரணத்தை போல விபத்துகளால் ஏற்படும் மரணங்களும் அதிகமாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. விபத்துகள் ஏற்படுவதற்கு வாகனங்களை இயக்கும் போது கவன குறைவு, விதிமுறைகளை மீறி வாகனங்களை இயக்குதல், அதிக வேகத்தில் வாகனங்களை இயக்குவதே முக்கிய காரணமாக உள்ளது.

சாலை விபத்துகளை தவிர்க்க அரசு விதிமுறைகளை நிர்ணயித்துள்ளது. பொதுமக்கள் அந்த விதிமுறைகளை முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மூலமாக கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

விபத்தில்லாத மாவட்டமாக...

எனினும், ஒருசிலர் வேக கட்டுப்பாட்டை மீறி அதிவேகத்தில் வாகனங்களை இயக்குவதாலும், தவறான பாதையில் எதிர்திசையில் வாகனங்களை இயக்குவதாலும், செல்போனில் பேசிக்கொண்டே வாகனங்களை இயக்குவதாலும் விபத்துகள் ஏற்படுகின்றன.

இந்த விதிமீறல்களை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டும். வேலூர் மாவட்டத்தை விபத்தில்லாத மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்ட பொறியாளர்கள் தனசேகரன் மற்றும் அதிகாரிகள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story