நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு


நாமக்கல் மண்டலத்தில்கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு
x
தினத்தந்தி 10 Jun 2023 12:30 AM IST (Updated: 10 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.135-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் பல்லடத்தில் நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை கிலோ ரூ.137 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

இதனிடையே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.94-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.1 உயர்த்தப்பட்டு கிலோ ரூ.95 ஆக ஆனது. முட்டை கொள்முதல் விலை 515 காசுகளாக நீடிப்பதாகவும், அவற்றின் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.


Next Story