தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மாவீரர் நாள் அனுசரிப்பு...!


தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மாவீரர் நாள் அனுசரிப்பு...!
x
தினத்தந்தி 27 Nov 2022 9:00 PM IST (Updated: 27 Nov 2022 9:12 PM IST)
t-max-icont-min-icon

தஞ்சை அருகே உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் மாவீரர் நாள் அனுசரிக்கப்பட்டது.

தஞ்சை,

இலங்கையில் தமிழீழ விடுதலை போராட்டத்தில் உயிர்நீத்த வீரர்களை நினைவுகூரும் விதமாக மாவீரர் நாள் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும். இதேபோன்று, தஞ்சை அருகே உள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்தில் இந்த நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

இதன்படி இன்றைய தினம் முள்ளிவாய்க்கால் முற்றம் உருவாக்கப்பட்ட 10-ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மாவீரர் நாள் அனுசரிப்பு உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது. அப்போது ஈழப்போரில் உயிரிழந்த மாவீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, 5 நிமிடம் பாடல்பாடி அஞ்சலி செலுத்தப்பட்டது.


Next Story