வீர, தீர செயல்புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வீர, தீர செயல்புரிந்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
2022-ம் ஆண்டுக்கான சுதந்திர தினவிழாவின் போது வீர, தீர செயல்புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருது பெற தகுதி உள்ளவர்கள் https://awards.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்கள் பெயர், முகவரி, தாங்கள் நிகழ்த்திய வீர தீரச் செயல், நிகழ்த்திய நாள், அதனால் பயனடைந்தோர் விவரம் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) குறிப்பிட வேண்டும். விருதுகள் பெற்ற விவரம் குறிப்பிட வேண்டும். மேலும் தாங்கள் புரிந்த சாதனைகளை 250 வரிகளுக்கு மிகாமல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தயாரித்து சமூகநல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி- 628101, தொலைபேசி எண்: 0461-2325606 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.