சிவன் கோவிலில் ஐகோர்ட்டு நீதிபதி சாமி தரிசனம்
சிவன் கோவிலில் ஐகோர்ட்டு நீதிபதி சாமி தரிசனம் செய்தார்.
அரியலூர்
தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு செயல் தலைவரும், சென்னை ஐகோர்ட்டு நீதிபதியுமான வைத்தியநாதன் நேற்று தனது மனைவியுடன் அரியலூரில் உள்ள ஆலந்துரையார் கோவிலுக்கு வந்தார். அங்கு அவர்கள் சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அவரை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிறிஸ்டோபர் தலைமையில் கூடுதல் மாவட்ட நீதிபதி தகருணன், குடும்ப நல நீதிபதி செல்வம், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சரவணன், நீதித்துறை நடுவர் அறிவு, மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் கற்பகவள்ளி, செந்தில்குமார் மற்றும் வழக்கறிஞர் சங்கத் தலைவர் மனோகரன், ஓம் நமச்சிவாய திருப்பணிக்குழுவினர் ஆகியோர் வரவேற்றனர்.
Related Tags :
Next Story