குடும்பத்தினரிடம் உயர்அதிகாரிகள் விசாரணை


குடும்பத்தினரிடம் உயர்அதிகாரிகள் விசாரணை
x
தினத்தந்தி 9 Dec 2022 1:00 AM IST (Updated: 9 Dec 2022 1:01 AM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட மத்திய பாதுகாப்பு படை வீரரின் குடும்பத்தினரிடம் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

சேலம்

இரும்பாலை:-

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட மத்திய பாதுகாப்பு படை வீரரின் குடும்பத்தினரிடம் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தினர்.

பாதுகாப்பு படை வீரர் தற்கொலை

மத்திய அரசின் பொது நிறுவனங்களில் ஒன்றான சேலம் இரும்பாலையில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரரான தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியை சேர்ந்த சக்திவேல் என்பவர் பணியில் இருந்தார்.

அவர் நேற்று மதியம் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இரும்பாலை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

விசாரணை

மத்திய பாதுகாப்பு படை வீரர் சக்திவேல் தற்கொலை தொடர்பாக போலீஸ் துணை கமிஷனர் மாடசாமி, இரும்பாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். சக்திவேலின் உடல் நேற்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அடக்கம் செய்வதற்காக சொந்த ஊரான தேனி மாவட்டத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

குடும்ப தகராறில் சக்திவேல் தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்பட்டது. எனவே அவருடைய மனைவி சித்ரா மற்றும் குடும்பத்தினரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பணிச்சுமையா?

மற்றொருபுறம் சக்திவேல் பணிச்சுமையால் தற்கொலை செய்து இருக்கலாம் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகளும் சக்திவேல் தற்கொலை தொடர்பாக விசாரணை நடத்தினர்.


Next Story