உயர் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும்


உயர் மின்கோபுர விளக்கு அமைக்க வேண்டும்
x

காரியாபட்டி-கள்ளிக்குடி பைபாஸ் சாலையில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி-கள்ளிக்குடி பைபாஸ் சாலையில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விரிவாக்க பகுதி

காரியாபட்டி பேரூராட்சி வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். காரியாபட்டி - கள்ளிக்குடி சாலையில் உள்ள விரிவாக்க பகுதிகளில் ஏராளமான வீடுகள் உருவாகி வருகிறது. எனவே காரியாபட்டி - கள்ளிக்குடி சாலையில் அதிகமாக போக்குவரத்து இருந்து வருகிறது. மேலும் இந்த சாலையில் காலை, மாலை நேரங்களில் பொதுமக்கள் நடைபயிற்சி செய்து வருகின்றனர்.

காரியாபட்டியில் இருந்து மதுரை மாவட்டம், இலுப்பை குளம், வேப்பங்குளம், சுந்தரங்குண்டு, வெள்ளாகுளம், மருதங்குடி, மொச்சிகுளம், குராயூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் காரியாபட்டிக்கு வந்து செல்கின்றனர்.

உயர் மின் கோபுர விளக்கு

இவர்கள் இரவு நேரங்களில் பைபாஸ்சாலையை கடந்து செல்லும்போது அடிக்கடி விபத்து நடைபெற்று வருகிறது. இந்த பைபாஸ் சாலையில் மின்விளக்கு இல்லாததால் அடிக்கடி விபத்து நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்த விபத்துக்களை தவிர்க்க உயர்மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரங்களில் மின் விளக்கு இல்லாததால் அந்த வழியாக பெண்கள் அச்சத்துடன் கடந்து செல்ல வேண்டி உள்ளது. ஆதலால் மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் காரியாபட்டி-கள்ளிக்குடி பைபாசில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Next Story