கீழக்கரையில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைக்க வலியுறுத்தல்


கீழக்கரையில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைக்க வலியுறுத்தல்
x

கீழக்கரையில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைக்க வலியுறுத்தப்பட்டது.

ராமநாதபுரம்

கீழக்கரை,

கீழக்கரையில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 10-க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் உள்ளன. அதில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் அடங்கும். இந்த நிலையில் அரசு அறிவித்த 7 சதவீதம் நீட் தேர்விற்கான இட ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசு கொண்டுவந்த 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கிடைக்கப்பெறுவதில்லை. கீழக்கரையில் அரசு பள்ளி இல்லாததால் ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகின்றன. இதனால் சில ஏழை எளிய மாணவ மாணவிகள் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ராமநாதபுரம் சென்று அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர். எனவே, கீழக்கரையில் அரசு உயர்நிலைப்பள்ளி அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story