அதிக புகையை வெளியிடும் வாகனங்கள்


அதிக புகையை வெளியிடும் வாகனங்கள்
x

அதிக புகையை வெளியிடும் வாகனங்கள்

திருப்பூர்

தளி

உடுமலை பகுதியில் அதிக புகையை வெளியிடும் வாகனகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

வாகன போக்குவரத்து

போக்குவரத்துதான் பொருளாதாரத்தின் ஆணிவேர். போக்குவரத்து இல்லாத ஊர் ெபாருளாதாரத்தில் பின் தங்கி இருப்பதை காணலாம். இன்றைய கால கட்டத்தில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. வீட்டிற்கு ஒரு வாகனம் என்ற நிலைமாறி ஒருவருக்கு ஒரு வாகனம் என்றாகி விட்டது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க அதில் இருந்து வெளிப்படும் புகையால் காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுவும் வெப்பமயமாதலும் ஏற்பட்டு வருகிறது.

வாகனங்கள் வைத்துள்ள பெரும்பாலானோர் அதன் முறையான பராமரிப்பில் அக்கறை காட்டுவதில்லை. ஓட்டத்திற்கு ஏற்ப ஒரு குறிப்பிட்ட காலத்தில் முறையாக பராமரிப்பதற்கு முன் வருவதில்லை. இதனால் வாகனத்தின் உள்பாகங்கள் படிப்படியாக படிப்படியாக சேதமடைந்து புகையை வெளியிட்டு செல்வதால் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுவதுடன் பின்னால் வரும் வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு விதமான உடல் பாதைகளை ஏற்படுத்தி வருகிறது.

நடவடிக்கை

புகையின் தாக்கத்தால் கண், காது தொண்டையில் எரிச்சல் என தொடங்கி குறுகிய கால பாதிப்பாக இருமலும், மூச்சுத்திணறலும் தீவிர பாதிப்பாக ஆஸ்துமா, இதய நோய்கள் போன்றவை மனிதர்களை ஆட்கொண்டு வருகிறது. உடுமலைப் பகுதியில் மோட்டார் சைக்கிள் முதல் கனரக வாகனங்கள் வரை அதிகளவில் புகையை வெளியிட்டவாறு செல்கிறது. போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வாகனங்களை முந்திச் செல்வது என்பது இயலாத காரியமாகும். இதனால் புகையை சகித்துக் கொண்டு பின்னே செல்லும்போது பல்வேறு விதமான உடல் உபாதைகள் பொதுமக்களுக்கு ஏற்பட்டு வருகிறது.

முறையான பராமரிப்பு இல்லாத ஒரு வாகனம் வாகன ஓட்டிகளுக்கும் உடல் சார்ந்த கேடுகளையும், பொருளாதார ரீதியான இழப்பையும் ஏற்படுத்துகிறது.

புகையை வெளியிட்டவாறு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையும் உடுமலையில் பகுதியில் அதிகரித்து வருகிறது.எனவே உடுமலை பகுதியில் உள்ள சாலைகளில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து அதிக அளவில் புகையை வெளியிட்டவாறு செல்லும் வாகனங்களை பிடித்து அபராதம் விதிப்பதுடன் தகுந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

----


Next Story