திருவாரூரில், கடும் குளிரால் மக்கள் அவதி
மாண்டஸ் புயல் காரணமாக திருவாரூரில் கடும் குளிர் நிலவியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். தண்ணீர் நிரம்பி கடல் போல கமலாலய குளம் காட்சியளிக்கிறது.
திருவாரூர்;
மாண்டஸ் புயல் காரணமாக திருவாரூரில் கடும் குளிர் நிலவியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். தண்ணீர் நிரம்பி கடல் போல கமலாலய குளம் காட்சியளிக்கிறது.
கடும் குளிர்
மாண்டஸ் புயல் காரணமாக தமிழகத்தில் குறிப்பாக கடலோர மாவட்டகளில் கன மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் திருவாரூர் மாவட்டத்தில் வெயில் இன்றி, அவ்வப்போது சாரல் மழை பெய்தது.இதை தாண்டி தட்ப வெப்ப நிலை மாறி கடும்குளிர் நிலவியது. கடும் குளிரால் மக்கள் மிகுந்த அவதியடைந்தனர்.
கடல் போல கமலாலய குளம்
இதனையடுத்து நேற்று காலை முதல் இரவு மிதமான மழை விட்டு, விட்டு பெய்தது. இந்த குளிர்ச்சியான நிலையில் கடும் குளிர் நிலவியதால், சாலைகளில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகன ஒட்டிகள் குளிரில் நடுங்கி பாதிக்கப்பட்டனர்.பருவ மழை காரணமாக திருவாரூர் கமலாலயம் குளத்தில் தண்ணீர் நிரம்பியது. இதனால் குளம் கடல் போல காட்சி அளிக்கிறது. மேலும் காற்று வேகமாக வீசியதால் கடல் அலைபோல் குளத்தில் தண்ணீர் தத்தளித்தது.