கூடலூரில் காட்சிப்பொருளான உயர்கோபுர மின்விளக்கு


கூடலூரில் காட்சிப்பொருளான உயர்கோபுர மின்விளக்கு
x
தினத்தந்தி 13 Feb 2023 1:00 AM IST (Updated: 13 Feb 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கூடலூரில் உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் காட்சிப்பொருளாக உள்ளது.

தேனி

தேனி மாவட்டத்தில் தேவதானப்பட்டி, தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய பகுதிகள் வழியாக குமுளிக்கு செல்ல புறவழிச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இதில் கூடலூர் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் புறவழிச்சாலை பணிகள் முடிவடைந்துவிட்டது. தற்போது கூடலூர் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கூடலூர் வடக்கு தியேட்டர் பகுதியில் புறவழி இணைப்புச்சாலையில் ஒரு உயர்கோபுர மின்விளக்கும், தெற்கு மந்தை வாய்க்கால் பாலம் அருகே மற்றொரு உயர்கோபுர மின்விளக்கும் நெடுஞ்சாலையின் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெற்கு மந்தை வாய்க்கால் பாலம் அருகில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு லாரி மோதி சேதமடைந்தது. இதனால் அங்கு தற்போது உயர்கோபுர மின்விளக்கு இல்லை.

இதற்கிடையே வடக்கு தியேட்டர் அருகில் உள்ள உயர்கோபுர மின்விளக்கு கடந்த சில வாரங்களாக எரிவதில்லை. காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியே இருள்சூழ்ந்து காணப்படுகிறது. அடிக்கடி வாகன விபத்தும் ஏற்படுகிறது. எனவே மந்தை வாய்க்கால் பாலம் பகுதியில் உயர்கோபுர மின்விளக்கை எரிய செய்யவும், வடக்கு தியேட்டர் அருகில் உயர்கோபுர மின்விளக்கை பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Related Tags :
Next Story