ரூ.7¾ லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்கு
ரூ.7¾ லட்சத்தில் உயர் கோபுர மின்விளக்கை ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்தார்.
திருநெல்வேலி
வள்ளியூர்:
வள்ளியூர் யூனியன் தனக்கர்குளம் பஞ்சாயத்து பெத்தரெங்கபுரத்தில் நெல்லை எம்.பி. ஞானதிரவியம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7¾ லட்சம் மதிப்பீட்டில் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க நிதி ஒதுக்கீடு செய்தார். இத்திட்ட பணிகள் நிறைவடைந்து மக்கள் பயன்பாட்டிற்காக திறப்பு விழா நடந்தது. ஞானதிரவியம் எம்.பி. தலைமை தாங்கி புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரம் மின்விளக்கை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் நம்பி, மாவட்ட கவுன்சிலர் சாந்தி, கிளைச் செயலாளர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story