பெரியபாளையம்-வெங்கல் நெடுஞ்சாலையில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி


பெரியபாளையம்-வெங்கல் நெடுஞ்சாலையில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதி
x

பெரியபாளையம்-வெங்கல் நெடுஞ்சாலையில் உயர் கோபுர மின்விளக்குகள் எரியாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம்-வெங்கல் நெடுஞ்சாலையில் பெரியபாளையம் மேம்பாலம் அருகே ஒரு உயர் கோபுர மின் விளக்கும், வடமதுரை கூட்டுச் சாலையில் ஒரு உயர் கோபுர மின் விளக்கும் உள்ளது. பல லட்சம் செலவில் இப்பகுதிகளில் உயர் கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டும், அவற்றை உரிய முறையில் பராமரிக்காததால் தற்போது அவை பழுதடைந்து காட்சி பொருளாக மட்டுமே உள்ளது.

இதனால் இப்பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உயர் கோபுர மின்விளக்குகளை போர்க்கால அடிப்படையில் பழுது நீக்கி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Next Story