பயிர்களுக்கு இலை வழியாகநுண்ணூட்டம் தெளிப்பதால் அதிக மகசூல் பெற முடியும்


பயிர்களுக்கு இலை வழியாகநுண்ணூட்டம் தெளிப்பதால் அதிக மகசூல் பெற முடியும்
x

பயிர்களுக்கு இலை வழியாக நுண்ணூட்டம் தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும் என வேளாண்மை இணை இயக்குனர் துரைசாமி தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்

இலை வழியாக நுண்ணூட்டம்

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பயிர்களுக்கு இலை வழியாக நுண்ணூட்டம் தெளிப்பதன் மூலம் அதிக மகசூல் பெற முடியும். நுண்ணூட்ட சத்தை இலை வழியாக தெளிப்பதால் சத்துக்களானது இலைத் துளைகள் மற்றும் செல்கள் மூலம் அனைத்து பாகங்களிலும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

பொதுவாக மண்ணின் ஈரம் குறைவாக இருக்கும்போது, வறட்சி காலங்களில் மண் கடினத் தன்மையுடன் காணப்பட்டாலோ அல்லது பயிர்களின் வளர்ச்சி பருவத்தில் ஊட்டச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் காணப்பட்டாலோ இலைவழி உரமிடுதல் பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும், பல ஊட்டச்சத்துக்கள் பல்வேறு தட்பவெப்ப காரணிகளால், நுண்ணூட்டச்சத்துக்களை மண்ணில் இடும்போது அவை மண்ணில் வேதியியல் மாற்றமடைந்து பயிருக்கு கிடைக்காத நிலைக்கு மாறிவிடும். வேர்ப் பகுதியை விட்டு ஊட்டச்சத்துக்கள் மழை நீரால் மண்ணின் அடிப்பாகத்திற்கு கொண்டு செல்லப்படும் சூழ்நிலைகளிலும் இலைவழி உரமிடுவது நல்ல பலனை தரும். பொதுவாக பேரூட்டச் சத்துக்களை மண்ணில் இடுவதும், இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்கள் மற்றும் நுண்ணூட்டசத்துக்களை இலைவழி தெளித்தலும் சிறந்தது.

இலைகருகல்

காலை 9 மணிக்கு முன் அல்லது மாலை 4 மணிக்கு பின் தெளிப்பது சாலச்சிறந்தது. காற்றின் வேகம் 5 மைல் வேகத்திற்குள்ளாக இருக்கின்ற நேரத்தில் தெளிப்பது மிகுந்த பலனைத் தரும். இலைவழியாகத் தெளிக்கும் போது, பரிந்துரைக்கப்பட்ட அடர்த்தியின் அளவு மாறாமல் கவனமாக கரைசல் தயாரிக்கப்பட வேண்டும். கரைசலின் அடர்த்தி அதிகமாகும் பட்சத்தில் இலைக்கருகல் ஏற்படும். மண்ணில் ஈரப்பதம் இருக்கும் நிலையிலேயே தெளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story