பயறு சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்


பயறு சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம்
x

தொழில்நுட்பங்களை கடைப்பிடித்தால் பயறு சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம் என விதைச்சான்று உதவி இயக்குனர் சுப்பராஜ் கூறினார்.

விருதுநகர்


தொழில்நுட்பங்களை கடைப்பிடித்தால் பயறு சாகுபடியில் அதிக மகசூல் பெறலாம் என விதைச்சான்று உதவி இயக்குனர் சுப்பராஜ் கூறினார்.

விதை நேர்த்தி

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

பயறு வகைகள் நல்ல விளைச்சல் பெற பருவத்திற்கேற்ற உயர் மகசூல் தரும் ரகங்களை தேர்ந்தெடுக்க வேண்டும். சான்று பெற்ற விதைகளை விதை நேர்த்தி செய்து பயன்படுத்த வேண்டும்.

விதைப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்னர் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

பின்னர் 2 பாக்கெட் சைசோபியம் மற்றும் 2 பாக்கெட் பாஸ்போ பாக்டீரியாவுடன் ½லிட்டர் ஆறிய வடிகஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். 50 மி.லி. சைசோபியம் மற்றும் 50 மி.லி. பாஸ்போ பாக்டீரியா இரண்டையும் உலர வைத்த பின் விதைக்க வேண்டும். நுண்ணுயிர் உரம் பயன்படுத்துவதால் மண்ணின் வளம் பாதுகாக்கப்படுவதோடு மகசூலும் அதிகரிக்கும்.

நீர்பாய்ச்சுதல்

அதிகாரிகளின் பரிந்துரைப்படி பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும். சூரிய ஒளி, நீர் வளம் ஆகியவற்றிற்கு போட்டியின்றி பயிர் வளரும். 3-வது நாளில் மண்ணில் உரம் இருப்பின் ஏக்கருக்கு 1 லிட்டர் பென்டிமெத்திலின், 200 லிட்டர் தண்ணீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும்.

35-வது நாளில் களைக்கொத்திமூலம் களை எடுக்க வேண்டும். 3-வது நாளிலும், 35-வது நாளிலும் தண்ணீர் பாய்ச்சவேண்டும். பின்னர் தேவைக்கேற்ப 10 முதல் 15 நாட்கள் ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும். நீர் தேங்குவதை தவிர்க்க வேண்டும். பயிரிடப்படும் பயிர்களில் பூக்கள் உதிர்வதை தடுக்க 2 சதவீதம் டி.ஏ.பி. கரைசலும், 40 டி.பி.எம். நாப்தலினும் கலந்து பூக்கள் பூக்க ஆரம்பித்தவுடன் ஒரு முறையும், 15 நாட்கள் கழித்து மறுமுறையும் தெளிக்க வேண்டும் அல்லது ஏக்கருக்கு பயறு வொன்டர் 2 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பூக்கள் பூக்க ஆரம்பித்தவுடன் தெளிக்க வேண்டும்.

மேற்கண்ட தொழில்நுட்பங்களை பயறு சாகுபடியில் கடைப்பிடித்து அதிக மகசூல் பெறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story