உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி
கோத்தகிரியில் உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.
நீலகிரி
கோத்தகிரி,
பொரங்காடு சீமை படுகர் நல சங்கம் சார்பில், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் நிகழ்ச்சி கோத்தகிரியில் உள்ள தனியார் அரங்கில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். 19 ஊர்த் தலைவர் ராமகவுடர், கைகாரு சீமை தலைவர் நஞ்சாகவுடர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கரன் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில் கல்வியாளர்கள், மாணவர்கள் எந்த உயர்கல்வியை படித்தால் அரசு பணிகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது குறித்து விளக்கினர். இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர். முடிவில் போஜன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story