அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி


அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி
x

செய்யாறில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சியை சப்-கலெக்டர் அனாமிகா தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு கல்வி மாவட்டத்தின் சார்பில் இந்தோ-அமெரிக்கன் பள்ளியின் கூட்ட அரங்கில் அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட கல்வி அலுவலர் ஆ.எல்லப்பன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியை உமாமகேஸ்வரி வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக செய்யாறு சப்-கலெக்டர் அனாமிகா கலந்து கொண்டு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்யாறு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தென்னாங்கூர் திருவள்ளூவர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செய்யாறு இந்தோ- அமெரிக்கன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரசு பல்வகை தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் வேலைவாய்ப்பு திறன் மற்றும் பயிற்சி நிறுவனம் சார்ந்த பேராசிரியர்கள் ராஜாராம், மோகன்ராஜ், சிவா, தனகீர்த்தி, சத்தியமூர்த்தி, சீனிவாசன், ஸ்ரீதேவி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஒருங்கிணைப்பாளர் பிரசன்னா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு மாணவர்கள் உயர்கல்வி குறித்து ஆலோசனை வழங்கி பேசினார்கள்.

முடிவில் தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.


Next Story