பள்ளி மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி


பள்ளி மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி
x

பள்ளி மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர்

தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மக்கள் மறுமலர்ச்சி தடம், வளர்ப்பு ஆகியவை இணைந்து பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் விடுதிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 பயிலும் மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் என்ற நிகழ்ச்சி "விழுதுகளை வேர்களாக்க" என்கிற தலைப்பில் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி கலையரங்கத்தில் நேற்று நடத்தின. இந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் கற்பகம் வழிகாட்டுதலின்பேரில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொறுப்பு) சரவணன் தலைமை தாங்கினார். மக்கள் மறுமலர்ச்சி தடத்தின் மண்டல ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கதிரவன், உத்வேக பேச்சாளர் செல்ல.உதயாதித்தன், உயர்கல்வி வழிகாட்டுபவர் சுனில்குமார், கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர் மணிமாறன் ஆகியோர் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளி, விடுதி பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளிடையே பள்ளி படிப்பு முடிந்த பிறகு உயர்கல்வியாக என்ன படிக்கலாம்? என்பது குறித்து விளக்கமாக பேசினர். முடிவில் மாவட்ட ஆதிதிராவிடர் நல தனி தாசில்தார் சத்தியமூர்த்தி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தினர் செய்திருந்தனர்.


Next Story