தயிர் பாக்கெட்டில் இந்தி - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்


தயிர் பாக்கெட்டில் இந்தி - முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின்  கண்டனம்
x
தினத்தந்தி 29 March 2023 8:25 PM IST (Updated: 29 March 2023 8:29 PM IST)
t-max-icont-min-icon

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்புக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை

தயிர் பாக்கெட்டுக்களில் இந்தி வார்த்தையைப் பயன்படுத்தக் கூறும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் அறிவிப்புக்கு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து'அவர் வெளியிட்டுள்ள பதிவில் ,

"எங்கள் தாய்மொழியைத் தள்ளிவைக்கச் சொல்லும் (இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்), தாய்மொழி காக்கும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள். மக்களின் உணர்வுகளை மதியுங்கள்! #இந்தி திணிப்பைநிறுத்துங்கள். குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம், தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள். என தெரிவித்துள்ளார்.


Related Tags :
Next Story