இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 May 2023 12:15 AM IST (Updated: 17 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தேனி பழைய பஸ் நிலையம் அருகில், இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி

தேனி பழைய பஸ் நிலையம் அருகில், இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரவிக்குமார் தலைமை தாங்கினார். இந்து முன்னணி கோட்ட செயலாளர் கணேசன், மாவட்ட செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து ஆட்டோ முன்னணி மாநில துணைத்தலைவர் கார்த்திக் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

ஆர்ப்பாட்டத்தின்போது, கடந்த 9 ஆண்டுகளில் விலைவாசி பன்மடங்கு உயர்ந்துள்ள நிலையில், ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் ஆட்டோ டிரைவர்களின் வருவாய் மிகவும் குறைந்துள்ளதால் ஆட்டோ மீட்டர் கட்டணத்தை தமிழக அரசு மாற்றியமைக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை தொழிலாளர் சங்கங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி மீட்டர் கட்டணத்தை மாற்றியமைக்க சட்டம் இயற்ற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் இந்து ஆட்டோ முன்னணி தேனி நகர ஒருங்கிணைப்பாளர் செல்வம் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story