இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்
சாயல்குடி
சாயல்குடியில் முன்னாள் மத்திய மந்திரி ஆ..ராசாவை கண்டித்து இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சேர்மன் தலைமை தாங்கினார். இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி, ஒன்றிய செயலாளர் பூமிநாதன், பா.ஜ.க. கடலாடி வடக்கு ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன். மாவட்ட விவசாய அணி துணைத்தலைவர் சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஆ. ராசாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பா.ஜ.க. மாவட்ட செயற்குழு உறுப்பினர் கதிர்வேல், இளைஞரணி துணைத் தலைவர் மதன்குமார், பட்டியல் அணி செயலாளர் ராஜவேல், கடலாடி தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் ராஜசேகர், இளைஞரணி தலைவர் ராஜவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story