இந்து முன்னணி கூட்டம்


இந்து முன்னணி கூட்டம்
x

களக்காட்டில் இந்து முன்னணி கூட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி

களக்காடு:

நெல்லை புறநகர் மாவட்ட இந்து முன்னணி செயற்குழு கூட்டம் களக்காடு காசிவிஸ்வநாதர் ஆலயத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. நெல்லை கோட்ட தலைவர் தங்கமனோகர் சிறப்புரையாற்றினார். மாவட்ட துணைத் தலைவர் மாரியப்பன், செயலாளர் செல்வகுமார், செயற்குழு உறுப்பினர் ஜெயகிருஷ்ணன், வள்ளியூர் ஒன்றிய பொதுச்செயலாளர் பூபதி, நாங்குநேரி ஒன்றிய தலைவர் கருத்தபாண்டி, செயலாளர் ஆர்தர், களக்காடு ஒன்றிய செயலாளர் ஆனந்தராஜ், களக்காடு நகர செயலாளர் முத்துகுமார், விக்கிரமசிங்கபுரம் நகர தலைவர் கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாவட்ட செயலாளர் சிதம்பரம் செய்திருந்தார்.

கூட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு இந்த ஆண்டு இந்து முன்னணி சார்பில் நெல்லை புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர பகுதிகளில் 201 விநாயகர் சிலைகள் செப்டம்பர் 18-ந் தேதி பிரதிஷ்டை செய்து 24-ந் தேதி பாபநாசம் மற்றும் உவரி பகுதிகளில் விஜர்சனம் செய்வது, இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் பிறந்த தினமான 19-ந் தேதி இந்து எழுச்சி தினமாக அனைத்து கிளைகளிலும் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

1 More update

Next Story