இந்து முன்னணி பேரியக்கம் ஆர்ப்பாட்டம்
இந்து முன்னணி பேரியக்கம் ஆர்ப்பாட்டம்
தஞ்சை பெரிய கோவிலுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா வந்த ஒரு பிரிவினர் அங்கு இறைச்சி உணவு சாப்பிட்டனர். இதை கண்டித்து இந்து முன்னணி பேரியக்கம் தஞ்சை மாநகர மாவட்டம் சார்பில் ரெயிலடியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக நகரில் பல்வேறு இடங்களில் நோட்டீசு ஒட்டினர். நேற்று மாலை தஞ்சை பெரிய கோவில் முன்பு திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி கோட்டச் செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளரும், திருப்பூர் கோட்டச் செயலாளரும் மோகனசுந்தரம் முன்னிலை வகித்தார். தஞ்சை பெரிய கோவிலில், மாற்று மதத்தைச் சேர்ந்தவர்களும் இந்து மத நம்பிக்கைகளை பின்பற்ற வேண்டும், தஞ்சை பெரிய கோவிலில் வெளிப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தஞ்சை பெரிய கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.