ஆரணியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்


ஆரணியில் இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்
x

ஆரணியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை

ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆரணிப்பாளையம் மோகனன் தெருவை சேர்ந்த ஆர்.கணேஷின் மகனும் பிளஸ்-2 மாணவருமான திருமுருகன் (வயது 17) கடந்த 24-ந்தேதி ஆரணி பஸ் நிலையம் எதிரே உள்ள அசைவ ஓட்டலில் தந்தூரி சிக்கன் உணவை சாப்பிட்டுள்ளார். அந்த உணவு நஞ்சாக மாறியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்தநிலையில் ஆரணி மணிக்கூண்டு அருகில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் சி.ஏ.தாமோதரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் நாகராஜன், நகர செயலாளர் முத்து, ஒன்றிய தலைவர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து இளைஞர் முன்னணியின் நகர செயலாளர் விக்னேஷ் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக இந்து முன்னணி கோட்ட தலைவர் கோ.மகேஷ், கோட்ட அமைப்பாளர் டி.வி.ராஜேஷ் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அசைவ உணவகங்களை கண்டித்தும், உணவகங்களை கண்காணிக்க தவறிய அதிகாரிகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். மேலும் ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி அமைப்பினர், பா.ஜ.க. முன்னாள், இந்நாள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஒன்றிய செயலாளர் தினேஷ் கூறினார்.


Next Story