இந்து முன்னணி தெருமுனை பிரசார கூட்டம்
திருப்புல்லாணி ஒன்றியத்தில் இந்து முன்னணி தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
ராமநாதபுரம்
கீழக்கரை,
ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் இந்துமுன்னணி சார்பாக 4 இடங்களில் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. ரெகுநாதபுரம் பஸ் நிலையத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் பாபு தலைமை தாங்கினார். சேதுநகர் பஸ் நிலையத்தில் ஒன்றிய செயலாளர் கிஷோர் தலைமை தாங்கினார். குத்துக்கல்வலசை பஸ் நிலையத்தில் ஒன்றிய துணைத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார்.சின்ன ஏர்வாடி கிராமத்தில் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.இந்து முன்னணி மாவட்ட செயலாளர் சக்திவேல் சிறப்புரை ஆற்றினார்.ஒன்றிய துணை தலைவர் ராஜ்குமார், கோபாலகிருஷ்ணன் மற்றும் இந்து முன்னணி தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story