இந்து முன்னணி-தமிழர் நீதிக்கட்சி நிர்வாகிகள் மோதல்; 2 பேர் கைது


இந்து முன்னணி-தமிழர் நீதிக்கட்சி நிர்வாகிகள் மோதல்; 2 பேர் கைது
x

இந்து முன்னணி-தமிழர் நீதிக்கட்சி நிர்வாகிகள் மோதலில் ஈடுபட்டதையடுத்து, 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வாரியங்காவல் கிராமத்தில் திடீர்குப்பத்தில் உள்ள சுப்பிரமணியன் கோவில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரனின் மகன் இளையராஜா என்ற ராக்கெட் ராஜா(வயது 35). இவர் இந்து முன்னணியின் மாவட்ட செயலாளராக உள்ளார். இதேபோல் சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாக்கியராஜ்(45). இவர் தமிழர் நீதிக் கட்சியின் மாவட்ட செயலாளராக உள்ளார். இவர்கள் இருவரும் நண்பர்கள் ஆவார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இளையராஜா மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் ஒருவரையொருவர் தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கிக்கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறி இருவரும் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தனித்தனியே புகார் அளித்தனர். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லட்சுமி பிரியா வழக்குப்பதிந்து இளையராஜா, பாக்யராஜ் ஆகியோரை கைது செய்தார்.


Next Story