இந்து முன்னணி செயற்குழு கூட்டம்
இந்து முன்னணி செயற்குழு கூட்டம் நடந்தது.
திருநெல்வேலி
சேரன்மாதேவி:
இந்து முன்னணி சேரன்மாதேவி ஒன்றிய செயற்குழு கூட்டம் பத்தமடை அருகே மணிமுத்தார்குளம் கிராமத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமை தாங்கினார். சேரன்மாதேவி ஒன்றிய தலைவர் கொம்பையா முன்னிலை வகித்தார். பத்தமடை பேரூராட்சிக்கு உட்பட்ட மணிமுத்தார்குளம் கிராம மக்கள் தங்களது அன்றாட தேவைக்கும், பள்ளி மற்றும் வேலைக்கு செல்வதற்கும் வெளியூர் செல்ல போக்குவரத்து வசதியின்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக பகுதி நேர பஸ் வசதி செய்து தர வேண்டும், பிராஞ்சேரி முதல் அம்பை வரையிலான சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் கணேசன், ராஜசேகர், பத்தமடை நகர செயலாளர் சுப்பிரமணியன், கோபாலசமுத்திரம் நகர செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story