கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து  இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x

கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்



செஞ்சி,

பெரியார் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கூறி, இந்து முன்னணியின் கலை இலக்கிய அணி மாநில தலைவர் கனல் கண்ணன் நேற்று முன்தினம் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்த கைது நடவடிக்கையை கண்டித்து, விழுப்புரம் வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் செஞ்சி கூட்டு ரோட்டில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் எஸ்.வி. சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பாலு, மாவட்ட பொது செயலாளர் பிரித்திவிராஜ், மாவட்ட அமைப்பாளர் விஷ்ணு ராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் எம்.எஸ். ராஜேந்திரன், நகர் பா.ஜ.க. நகர தலைவர் தங்கராமு, அரசு தொடர்பு மாவட்ட செயலாளர் சந்திரசேகர், நகர செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, 15 பேரை செஞ்சி போலீசார் கைது செய்து, மாலையில் விடுவித்தனர்.

இதேபோல் கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் இந்து முன்னணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக மாவட்ட செயலாளர் சக்திவேல் உள்பட 15 பேரை போலீசார் கைது செய்து பின்னர் மாலையில் அனைவரையும் விடுவித்தனர்.

1 More update

Next Story