இந்து முன்னணியினர் போராட்டம்
தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் அடிப்படை வசதி செய்யக்கோரி இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு சவுந்தரராஜபெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி, இந்து முன்னணி சார்பில் கோவில் செயல் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய துணை தலைவர் அருண்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய தலைவர் சக்திவேல் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணை தலைவர் வினோத்ராஜ், செயற்குழு உறுப்பினர் ரஞ்சித்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது கோவிலில் பக்தர்கள் தங்குவதற்கு விடுதி வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும் என்று வலியுறுத்தினர்.
Related Tags :
Next Story