இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x

திருச்சுழி அருகே இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர்

திருச்சுழி,

திருச்சுழி அருகே ம.ரெட்டியபட்டியில் ரெட்டியார்களுக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீவரதராஜபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்தநிலையில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை வருகிற 14-ந் தேதி கோவிலின் கணக்கு வழக்கு, தங்கம், வெள்ளி உள்ளிட்ட நகைகள், கோவிலின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரப்போவதாக கோவிலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் ம.ரெட்டியபட்டி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோவிலுக்கு விருதுநகர் சொக்கநாதர் கோவில் செயல் அலுவலரை தக்காராக நியமித்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறையின் இத்தகைய நடவடிக்கைகளை கண்டித்து ம.ரெட்டியபட்டி பஜார்பகுதியில் இந்து முன்னணி அமைப்பினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகர், ராமநாதபுரம் மாவட்ட இந்து முன்னணி அமைப்பின் தலைவர்களான யுவராஜ் மற்றும் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருச்சுழி ஒன்றிய தலைவர் தங்கராஜ், செயற்குழு உறுப்பினர் பண்ணை கந்தசாமி, விருதுநகர் இந்து முன்னணி அமைப்பு மாவட்ட செயலாளர் பிரபு மற்றும் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தமிழக அரசை கண்டித்தும், இந்து சமய அறநிலையத்துறையின் நடவடிக்கையை கைவிடக்கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.



Next Story