இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x

கோவில்பட்டியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி பயணிகள் விடுதி முன்பு நகர இந்து முன்னணி சார்பாக, மதமாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் சீனிவாசன், ஒன்றிய தலைவர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் வி. பி. ஜெயக்குமார், மாநில செயலாளர் குற்றாலநாதன், மாநில பொதுச் செயலாளர் அரசு ராஜா ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் வெங்கடேசன் நகரச் செயலாளர் சரவணன், முனீஸ்வரன், ஒன்றிய செயலாளர் கண்ணன், பா.ஜ.க. நகர தலைவர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story