இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2022 12:15 AM IST (Updated: 20 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

செங்கோட்டையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது

தென்காசி

செங்கோட்டை:

செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு, நகர இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்து முன்னணி மாவட்ட துணைத்தலைவா் முருகன் தலைமை தாங்கினார். வழக்கறிஞா் அணி மாநில துணைத்தலைவா் சாக்ரடீஸ், நகர தலைவா் முருகன், பா.ஜ.க. ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவா் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனா்.

ஆப்பாட்டத்தில் இந்து முன்னணி மாநில நிர்வாக குழு உறுப்பினா் மாயக்கூத்தன் கண்டன உரையாற்றினார். இந்து முன்னணி மாவட்ட செயலாளா் குளத்தூரான், தென்காசி நகர தலைவா் நாராயணன், விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட இணைச்செயலாளா்கள் குருசாமி, முத்துமாரியப்பன், பா.ஜ.க. நகர தலைவா் வேம்புராஜ், நகர பொதுச்செயலாளா் பாலகிருஷ்ணன், அரசு பிரிவு தொடா்பு மாவட்ட துணைத்தலைவா் சீனிவாசன் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆர்ப்பாட்டத்தில் ஆ.ராசாவை கண்டித்தும், அவரை கைது செய்ய வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினர்.


Next Story