ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்


ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
x

ஆ.ராசா எம்.பி.யை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

தி.மு.க. எம்.பி. ஆ.ராசா, இந்துக்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்கள் தெரிவித்ததை கண்டித்து வேலூரை அடுத்த ஊசூர் குளத்துமேட்டில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் கோட்ட பொருளாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், சந்தோஷ், ஒன்றிய துணை தலைவர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் ஒன்றிய தலைவர் விஜய்ஆனந்த் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பா.ஜ.க. பேச்சாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினார். இதில் இந்துமுன்னணியினர் கலந்து கொண்டு கோஷமிட்டனர். முடிவில் ஒன்றிய செயற்குழு உறுப்பினர் சக்கரபாணி நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு, பாகாயம் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story