இடை நிறுத்த தரிசன முறையை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
அருணாசலேஸ்வரர் கோவிலில் ரூ.300 கட்டண சீட்டு என்ற இடை நிறுத்த தரிசன முறையை கண்டித்து இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர் ஒருவருக்கு ரூ.300 கட்டண சீட்டு என்ற பெயரில் இடை நிறுத்த தரிசனம் முறையை கண்டித்து இந்து முன்னணி திருவண்ணாமலை நகரம் சார்பில் அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் ஆட்சேபனை மனு கொடுக்கும் போராட்டம் இன்று நடைபெற்றது.
முன்னதாக அவர்கள் கோவிலின் 16 கால் மண்டபத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் செந்தில் தலைமை தாங்கினார்.
மாவட்ட பொதுச்செயலாளர் அருண்குமார், மாவட்ட செயலாளர்கள் சிவா, கவுதம், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொதுச் செயலாளர் மஞ்சுநாதன் வரவேற்றார்.
வேலூர் கோட்ட தலைவர் கோ.மகேஷ் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
தொடர்ந்து அவர்கள் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர் ஒருவருக்கு ரூ.300 கட்டண சீட்டு என்ற பெயரில் இடை நிறுத்த தரிசனம் முறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
பின்னர் இந்த தரிசன முறைக்கு ஆட்சேபனை தெரிவித்து கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதில் இந்து முன்னணியினர் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.