போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது


போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது
x

போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது

திருவாரூர்

இந்து மக்கள் கட்சியின் சார்பில் கனிம வளங்களை உரிமம் இல்லாமல் கொள்ளையடிப்பவர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.டி.எம். மது விற்பனையை தடை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி திருவாரூர் மாவட்ட தலைவர் ஜெயராமன் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜசேகர், மாவட்ட பொருளாளர் சக்திவேல், ஒன்றிய தலைவர் கண்ணன் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் தாசில்தாரிடம் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் நகர போலீசார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இந்து மக்கள் கட்சியின் நிர்வாகிகளை கைது செய்தனர்.


Related Tags :
Next Story