கள்ளுக்கடைகளை திறக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் மனு
கள்ளுக்கடைகளை திறக்கக்கோரி இந்து மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்.
மயிலாடுதுறை
சீர்காழி:
சீர்காழி தாசில்தார் அலுவலகத்திற்கு மாநில செயலாளர் சாமிநாதன் தலைமையில் இந்து மக்கள் கட்சியினர் வந்தனர். பின்னர் தாசில்தார் செந்தில்குமாரிடம் ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்து வருகின்றனர். இதனை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். மேலும் தமிழகம் முழுவதும் கள் இறக்க அரசு அனுமதி வழங்கி கள்ளை அரசே கொள்முதல் செய்து கள்ளுக்கடைகளை திறந்து வினியோகம் செய்ய வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. அப்போது மாவட்ட அமைப்பாளர் பாலாஜி, மாவட்ட தலைவர் மணிகண்டன், நிர்வாகி தனசேகரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story