இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்


இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
x

மானூரில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி

மானூர்:

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு மற்றும் கள் இறக்க அனுமதி வேண்டி மானூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் எதிரே இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்து மக்கள் கட்சியின் மானூர் ஒன்றியத்தலைவர் சுடலைமாரி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ராம் முன்னிலை வகித்தார். மாநகர தலைவர் கண்ணன், மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோாிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story