இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மேலப்பாளையம் குறிச்சியில் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருநெல்வேலி
நெல்லை மேலப்பாளையம் குறிச்சியில் இந்து மக்கள் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். பனை கள், தென்னை கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி செயலாளர் ரவி தலைமை தாங்கினார். தச்சை பகுதி தலைவர் சின்னப்பா, மாநகர தொழிற்சங்க தலைவர் சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெல்லை மாவட்ட தலைவர் மாரியப்பன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் செயலாளர் லட்சுமணன், இளைஞர் அணி ரமேஷ், பாக்கியசாமி, உத்தண்டராமன், மாரிச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கள் குடிப்பது போன்று பதநீர் குடித்து, கள் இறக்க அனுமதிக்குமாறு கோஷங்களை எழுப்பினார்கள்.
Related Tags :
Next Story